கடமலைக்குண்டுவில்காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா

கடமலைக்குண்டுவில் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது.

Update: 2023-04-13 18:45 GMT

கடமலைக்குண்டு கிராமத்தில் காளியம்மன், முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 24 சமுதாய பொதுமக்கள் சார்பில் பங்குனி திருவிழா கடந்த 3 நாட்களாக நடந்தது. இதையொட்டி கடமலைக்குண்டுவின் வழியாக அமைந்துள்ள தேனி சாலையின் இருபுறமும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. திருவிழாவில் அலகு குத்தியும், பால்குடம், தீச்சட்டி எடுத்தும் பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதேபோல இளைஞர்கள் மாறுவேடங்கள் போட்டு கொண்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

இந்த 3 நாட்களும் ஒவ்வொரு சமுதாய பொதுமக்களும் தனித்தனியாக முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்து காளியம்மன் கோவில் திடலில் வைத்தனர். நேற்று முன்தினம் இரவு காளியம்மன் கோவில் திடலில் வைக்கப்பட்டிருந்த முளைப்பாரியை ஏராளமான பொதுமக்கள் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று கரட்டுப்பட்டி அருகே தனியார் தோட்ட கிணற்றில் கரைத்தனர்.

திருவிழாவில் இரவு கரகாட்டம், இன்னிசை கச்சேரி, ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கடமலைக்குண்டு கிராம தலைவர் டி.கே.ஆர் கணேசன், செயலாளர் நல்லாசிரியர் கோவிந்தன், பொருளாளர் தங்கராஜ், கிராம பெரியதனம் பால்ராஜ் மற்றும் கடமலைக்குண்டு கிராம கமிட்டியினர் செய்திருந்தனர். விழாவையொட்டி கடமலைக்குண்டு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்