ராமேஸ்வரத்தில் கடல் திடீரென 200 மீட்டர் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்.!

கடல்நீர் உள்வாங்கியுள்ளதால், கடலுக்கு அடியில் உள்ள பாசிகள், புற்கள், பாறைகள் உள்ளிட்டவை வெளியே தெரிகின்றன.;

Update:2023-05-20 12:17 IST

ராமநாதபுரம் ,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 200 மீட்டர் உள்வாங்கிய கடலால் மீனவர்கள் அச்சமடைந்து உள்ளனர். ராமேஸ்வரம் அடுத்த ஓலைக்குடா என்ற பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன் தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலையில் வழக்கத்திற்கு மாறாக ஓலைக்குடா கடல் பகுதியில் சுமார் 200 மீட்டர் வரை கடல்நீர் உள்வாங்கி கானப்பட்டது. கடல்நீர் உள்வாங்கியுள்ளதால், கடலுக்கு அடியில் உள்ள பாசிகள், புற்கள், பாறைகள் உள்ளிட்டவை வெளியே தெரிகின்றன.

ஓலைகுடா பகுதியில் உள்வாங்கிய கடல் சில மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக் கூறப்படுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்