பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது

கடையநல்லூர் பகுதியில் பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்;

Update:2023-06-26 01:05 IST

கடையநல்லூர்:

கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவர் ஒருவர் தன்னுடன் பயிலும் சக மாணவியிடம், தன்னை காதலிக்குமாறு கூறி அடிக்கடி தொந்தரவு செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு 23 வயதான வாலிபரும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், புளியங்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, பிளஸ்-2 மாணவர் மற்றும் வாலிபர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்