தர்மபுரி குமாரசாமிப்பேட்டைஅரசு பள்ளி சத்துணவு மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அரசு பள்ளி சத்துணவு மையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;

Update:2023-09-14 01:15 IST

தர்மபுரி

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை கிருபானந்த வாரியார் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் மாணவர்களுக்கு வழங்க தயாரித்து வைக்கப்பட்டு இருந்த மதிய உணவை தர்மபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, மாணவர்கள் பசியாக இருக்க கூடாது. வேண்டிய உணவை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். முட்டை வழங்கும் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் விடுபடாமல் வழங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் உணவு மாதிரியை தனியாக எடுத்து வைக்க வேண்டும். காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்க்க வேண்டும் என்று சத்துணவு அமைப்பாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்