உரக்கடைகளில் அலுவலர்கள் திடீர் ஆய்வு

பாலக்கோடு பகுதியில் உரக்கடைகளில் அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-09-14 16:42 GMT

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டகலை, விதை ஆய்வு துறை அதிகாரிகள் உரக்கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தரகட்டுப்பாட்டு அலுவலர் தாம்சன் தலைமையில் பூச்சி மருந்து ஆய்வாளர் மணிவண்ணன், தர்மபுரி வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ருத்ரமூர்த்தி, விதை ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, வெள்ளிச்சந்தை ஆகிய இடங்களில் உள்ள உரக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பூச்சி மருந்து உரிமம் பெற்று விற்பனை நடைபெறுகிறதா?, அனுமதி பெற்ற பூச்சி மருந்துகள், பூஞ்சான் மருந்துகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது 2 கடைகளில் விதிமுறைகளை மீறி பூச்சி மருந்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரர்களை அலுவலர்கள் எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்