கச்சத்தீவு பிரச்சினையில் இருநாடுகளும் சேர்ந்து நடவடிக்கை எடுப்பதே சிறந்தது

கச்சத்தீவு பிரச்சினையில் இருநாடுகளும் சேர்ந்து நடவடிக்கை எடுப்பதே சிறந்தது என்று இலங்கை எம்.பி. கூறினார்.;

Update:2022-05-21 02:01 IST

பெரம்பலூர்:

இலங்கை நாட்டின் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவு தலைவரும், நுவரெலியா தொகுதியின் எம்.பி.யுமான ராதாகிருஷ்ணன், நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருச்சியில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூர் துறைமங்கலம் நியூ காலனியில் உள்ள தனது தங்கை கவுசல்யா வீட்டிற்கு நேற்று வந்து தங்கினார். அவர் வருகிற 25-ந்தேதி வரை பெரம்பலூரில் தங்க உள்ளார். இதனால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தற்போது இலங்கையில் அசாதாரண சூழ்நிலையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, அரசியலில் சீரமமைப்பு இல்லாமல் காணப்படுகிறது. ராஜபக்சே குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ரணில் விக்கிரசிங்கே பிரதமர் பதவி ஏற்றுள்ளதாக கேள்வி எழுகிறது. கச்சத்தீவை பொறுத்தளவில் இந்திய அரசியவாதிகள் பேசினாலும் கூட இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுவார்களா? என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது. கச்சத்தீவு பிரச்சினையில் ஒரு சாரார் தரப்பில் நடவடிக்கை இருந்தால் அது தவறான நடவடிக்கை. இரு சாராரும் சேர்ந்து நடவடிக்கை எடுப்பதே சிறந்தது. எது எப்படி இருந்தாலும் 2 நாடுகளும் இன்று உடன்பட்டு செய்ய வேண்டிய பல வேலைகள் இருக்கின்றன. ஏனென்றால் இந்தியா தான் இலங்கைக்கு அதிகமான உதவிகள் செய்த நாடாக கருதுகிறோம்.

இந்தியாவின் உதவிகள் தான் இலங்கைக்கு மிக அத்தியாவசியமாக இருக்கிறது. ஆகவே இந்தியாவை ஒருபோதும் மறக்க முடியாது. இந்தியாவின் பிரதமர் மோடியையும், அவரது அரசாங்கத்தையும் பாராட்டுகிறோம். அதேநேரத்தில் தமிழக அரசும் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. முதல்-அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக மக்களும் உதவி செய்து வருகின்றனர். அவர்களையும் பாராட்டுகிறோம். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு வந்து சென்றது குறித்து பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்