பழைய இரும்புகடை அதிபர் வீட்டில் 13½ பவுன் நகை திருட்டு

நாமக்கல்லில் பழைய இரும்புகடை அதிபர் வீட்டில் 13½ பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-03-09 00:07 IST

நகை திருட்டு

நாமக்கல் - பரமத்தி சாலை பிரசன்னா நகரை சேர்ந்தவர் காசிராஜன் (வயது57). பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வியாபார விஷயமாக வெளியே சென்று விட்டார். அவரது மனைவி மீனா வீட்டை பூட்டிவிட்டு, சாவியை கேட்டில் உள்ள கம்பியில் உள்பக்கமாக மாட்டி விட்டு கடைவீதிக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டார்.

பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை திறந்து அதில் இருந்த 13½ பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

மர்ம நபருக்கு வலைவீச்சு

இது குறித்து காசிராஜன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீனா வெளியே செல்லும் போது சாவியை கேட்டில் வைத்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளார். அதை நோட்டமிட்ட மர்ம நபர் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்