காயிதே மில்லத் பிறந்தநாள் விழா

சங்கரன்கோவிலில் காயிதே மில்லத் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update:2023-06-06 00:30 IST

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காயிதே மில்லத் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, மதிமாரிமுத்து, நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, ஜிந்தா மைதீன், ஓய்வு பெற்ற தாசில்தார் சூரியநாராயணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்