காஞ்சீபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் கருட சேவை திருவிழா

காஞ்சீபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் கருட சேவை திருவிழா நடந்தது.;

Update:2023-03-18 14:47 IST

கோவில் நகரமான காஞ்சீபுரம் மாநகரில் வைணவ திருத்தலத்தில் 108 திவ்ய தேசங்களில் அதிக அளவிலான திவ்ய தேசங்கள் அமைந்துள்ள நகரமாக விளங்குகிறது.

அந்த வகையில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைணவ திருத்தலமாக விளங்கக்கூடிய சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்று அழைக்கபட கூடிய யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோற்சவமானது வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்ச்சவமானது கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அனுதினமும் காலை, இரவு என் இரு வேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் யதோக்தகாரி பெருமாள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அந்த வகையில் பிரம்மோற்ச்சவத்தின் 3-ம் நாளான நேற்று காலை முக்கிய திருவிழாவான கருடசேவை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. யதோக்தகாரி பெருமாள் கருட வாகனம் மீது அமர்ந்து எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனையொட்டி பஜனை கீர்த்தனைகளை முழங்க பக்தி பரவச பஜனை கோஷ்டி பக்தர்கள் நடனமாடி சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்