தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தை நாளை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-24 16:40 GMT

சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறி விற்பனைக்கு வருகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதால் கோயம்பேடு சந்தையில் கூலித்தொழிலாளர்களாகப் பணிபுரிந்த பலரும் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

இதனால் கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன், விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் கொண்டாட்டத்தில் இருப்பார்கள் என்பதல் நாளை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவதாகக் குறிப்பிட்டார்.

மேலும் லாரி ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் தீபாவளி விடுமுறையில் சென்றுள்ளதால் நாளை எந்த பணிகளும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்