கனமழையால் கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் மண்சரிவு - போக்குவரத்து பாதிப்பு

ஜே.சி.பி. வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ராட்சத பாறைகளை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றினர்.

Update: 2022-08-31 17:22 GMT

திண்டுக்கல்,

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக வத்தலகுண்டு பிரதான மலைப்பாதை, கொடைக்கானல்-பழனி பிரதான மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. சாலையின் நடுவே ராட்சத பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்குச் சென்று பாதையை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஜே.சி.பி. வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ராட்சத பாறைகளை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்