லைவ் அப்டேட்ஸ்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு...!

Update: 2022-07-11 01:08 GMT
Live Updates - Page 2
2022-07-11 04:11 GMT

அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

2022-07-11 04:10 GMT

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2022-07-11 04:03 GMT

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது...!

சென்னை ஐகோர்ட்டு அனுமதியளித்ததை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. முதலில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. செயற்குழுவை தொடர்ந்து பொதுக்குழு கூட உள்ளது.

2022-07-11 03:41 GMT

அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

அதிமுக பொதுக்குழுவை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை வானகரத்தில் இன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவை கூட்ட சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது



2022-07-11 03:30 GMT

உடைக்கப்பட்ட கதவு வழியாக அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்த ஓ.பன்னீர் செல்வம்...!

2022-07-11 03:13 GMT

பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் அடித்து உடைப்பு...!

2022-07-11 02:43 GMT

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகம் நோக்கி ஓ.பன்னீர் செல்வம் சென்றுகொண்டிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்