தமிழகத்தில் தாமரை விரைவில் மலரும்... கிருஷ்ணகிரியில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பேச்சு

திமுகவில் வாரிசு அரசியல் நடைபெற்று வருவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம் செய்தார்.

Update: 2023-03-10 08:56 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா திறந்துவைத்தார். பின்னர் அவர் 75அடி உயரமுள்ள கம்பத்தில் பாஜக கொடியினை ஏற்றி வைத்தார்.

காணொலியில் தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட பாஜக அலுவலகங்களையும் பாஜக தேசிய தலைவர் நட்டா திறந்தார். இதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:

மாநில கட்சிகள் எல்லாம் தற்போது குடும்ப கட்சிகளாக உள்ளன. காஷ்மீர், பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, தெலங்கானா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸின் மோசமான ஆட்சி காரணமாகவே மாநில கட்சிகள் தோன்றின. ஒவ்வொரு மாநிலத்திலும் குடும்ப கட்சிகளுக்கு எதிராக பாஜக போராடி வருகிறது.

தமிழகத்திலும் வாரிசு அரசியல். திமுகவில் வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது. தமிழக முதல் அமைச்சர் மு.கஸ்டாலின், தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். இன்னும் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. திமுகவிற்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை

தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும். ஆகவே தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும். இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்