மதுபாட்டில், சாராயம் கடத்தல்; வாலிபர் கைது
புதுச்சோியில் இருந்து சாராயம், மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள மாடாம்பூண்டி கூட்டுரோட்டில் திருப்பாலப்பந்தல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்தபோது புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வந்தது தொியவந்தது. இதையடுத்து மினி லாரியில் வந்த சங்கராபுரம் தாலுகா பழையனூர் கிராமத்தை சேர்ந்த மணி மகன் சதீஷ்குமார்(வயது 35) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 270 மது பாட்டில்கள், 10 லிட்டர் சாராயத்துடன் மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.