'என்.எல்.சி. நிறுவனம் தொடர்ந்து விரிவாக்க பணிகளை செய்தால் போராட்டம் பேரெழுச்சியாக நடைபெறும்' - சீமான் எச்சரிக்கை

என்.எல்.சி. நிறுவனத்திற்காக ஏற்கனவே நிலங்களை வழங்கியவர்களுக்கு சமமாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தினார்.;

Update:2023-03-15 12:56 IST

கடலூர்,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், என்.எல்.சி. நிறுவனத்திற்காக ஏற்கனவே நிலங்களை வழங்கியவர்களுக்கு சமமாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் புதிதாக நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என குறிப்பிட்ட அவர், என்.எல்.சி. நிறுவனம் தொடர்ந்து விரிவாக்க பணிகளை செய்தால் போராட்டம் இதை விட பேரெழுச்சியாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்