மணிப்பூர் கலவரம் உலக அரங்கில் இந்தியாவை தலைக்குனிய செய்துவிட்டது - கி.வீரமணி விமர்சனம்

மணிப்பூர் கலவரம் உலக அரங்கில் இந்தியாவை தலைக்குனிய செய்துவிட்டது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-21 14:55 GMT

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா அல்லது காட்டு மிராண்டி விலங்குகள் உலவும் காட்டில் தான் வாழ்கிறோமா என்ற வினாவை இந்திய மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நடக்கும் நிகழ்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 80 நாட்களாக அம்மாநிலத்தில் சிறுபான்மை பழங்குடி மக்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி இதற்குத் தூண்டுகோலாகவும், துணை போவதாகவும் இருக்கிறது என்று பாதிக்கப்பட்ட மக்களும், அனைத்துக் கட்சியினரும் ஒரே குரலில் குற்றம் சாட்டுகின்றனர்.

80 நாட்கள் இந்த கொடூரம் நடந்தும், பிரதமராக இருக்க கூடியவர் தலையிடவில்லை. மணிப்பூர் கலவரம் உலக அரங்கில் இந்தியாவை தலைக்குனிய செய்துவிட்டது.

மணிப்பூரில் வெறிபிடித்த ஒரு கும்பலால் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வு அது. நெஞ்சம் பொறுப்பதில்லையே. இனியும் மத்திய பா.ஜ.க. ஆட்சி தொடர, மீண்டும் அதிகாரத்தில் அமர கிஞ்சிற்றும் உரிமை இல்லை, தகுதியில்லை.

நாகரிகமும், மனித உரிமையும், ஜனநாயகமும், மதசார்பின்மையும், சமூகநீதியும் உயிர்ப் பிழைக்க 'இந்திய' மக்களே ஒரே குரலில் எழுவீர். வாக்குச் சீட்டால் பாசிசத்திற்கு மரணவோலை எழுதுவீர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்