கொத்தனார் பலி

போடியில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலியானார்.;

Update:2023-07-05 01:15 IST

போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 72). இவரது மகன் பாண்டி (45). கொத்தனார். இவர் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாண்டி போடி வந்தார். அங்கு தந்தையிடம் சென்று சொத்தில் பங்கு கேட்டார். அவர் சொத்தை பிரித்து தருவதாக கூறியதாக தெரிகிறது. இதற்காக அவர் போடியில் தங்கி, கொத்தனார் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை போடி அருகே உள்ள ெரங்கநாதபுரம் இந்திரா காலனியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் பாண்டி கட்டிட வேலை செய்து ெகாண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பாண்டி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்