பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 வழங்க கோரி கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கோரம்பள்ளம் அரசு ஐ.டி.ஐ. அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்கம் (CITU) சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தைப்பொங்கல் பண்டிகை தொகுப்புடன் ரூ.5,000 வழங்கிட வலியுறுத்தி, தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு, கோரம்பள்ளம் அரசு ஐ.டி.ஐ. அருகில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் தலைமை வகித்தார். இதில் கட்டுமான தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.