அரசியலில் கம்முனு இருக்கக் கூடாது: விஜய்க்கு அண்ணாமலை அறிவுரை
நான் பேசவே மாட்டேன்.. வேடிக்கை மட்டும் பார்ப்பேன் என்றால் உங்களை நம்பி எப்படி மக்கள் ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள் என்று அண்ணாமலை கூறினார்.;
புதுவை,
புதுவையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -அரசியலில் கம்முனு இருக்கக் கூடாது. திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விஜய் கருத்து தெரிவிக்காதது ஏன்? பேசவேண்டிய இடத்தில் பேசுங்கள் விஜய். எவ்வளவு பிரச்சினைகள் நடக்குது..எவ்வளவு சண்டைகள் நடக்குது.. நான் பேசவே மாட்டேன்.. வேடிக்கை மட்டும் பார்ப்பேன் என்றால் உங்களை நம்பி எப்படி மக்கள் ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள்.
தப்பா..தப்பு என்று சொல்லுங்கள்.. சரியா சரி என்று சொல்லுங்கள்... புதுவையில் ஒரு எம்.எல். ஏ இருக்கிறார். அவர் சிறுபான்மையினர் என்பதால் பொறுப்பு கொடுக்கவில்லை என்று பேசிய விஜய், திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மையினருக்காக ஏன் பேசவில்லை. புதுவை மக்களும் விஜய்யை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். புதுவை மக்களுக்கும் உண்மை தெரியும். தேர்தல் களத்தில் மோதுவோம். நியாயமான விஷயத்தில் ஒன்றாக இருப்போம் என்பதுதான் விஜய் அவர்களுக்கு நான் சொல்லும் தாழ்மையான கருத்து” என்றார்.