போலீசாருக்கு ரோந்து செல்ல புதிய மோட்டார் சைக்கிள்கள்

சிவகங்கை மாவட்டத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீசாருக்கு உதவிடும் வகையில் 10 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.;

Update:2023-03-26 00:15 IST


சிவகங்கை மாவட்டத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீசாருக்கு உதவிடும் வகையில் 10 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. போலீசாரின் ரோந்து பணிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிள்கள் வேகமாக செல்லும் திறன் உடையவை. அத்துடன் இவைகளில் சைரன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் போலீஸ் நிலையத்திற்கு வழங்கினார். இவை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தலா ஒரு மோட்டார் சைக்கிள் வீதம் வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் நந்தகோபால், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவண போஸ், பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்