தேசிய திறனாய்வு மாதிரி தேர்வு

செங்கோட்டை அரசு நூலகத்தில் தேசிய திறனாய்வு மாதிரி தேர்வு நடக்கிறது.;

Update:2023-02-16 00:15 IST

செங்கோட்டை:

செங்கோட்டை அரசு நூலக வாசகர் வட்டமும், ஜே.பி. கல்வியியல் கல்லூரி மற்றும் சேலஞ்ச் டியூசன் சென்டரும் இணைந்து தேசிய திறனாய்வு மாதிரி தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வானது வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை காலை 9.30 மணிக்கு நூலகத்தில் வைத்து நடக்கிறது.

இதில் ஆங்கில வழி மாணவர்களுக்கு ஆங்கில கேள்வித்தாளும், தமிழ் வழி மாணவர்களுக்கு தமிழ் கேள்வித்தாளும் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை என்.எம்.எம்.எஸ்.தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 9486984369 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று நூலகர் ராமசாமி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்