கனிமொழி எம்.பி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு
தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. தேர்தலில் மக்களின் வாக்குகளை கவர, அரசியல் கட்சிகள் கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளிப்பது வழக்கம். கடந்த ஆண்டு திமுக தனது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு பேருந்துகளில் இலவச பஸ் பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தது.
அதேபோல, ஒவ்வொரு கட்சிகளும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய இருக்கிறோம் என்பதை குறிப்பிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையை தயாரிக்க குழு அமைத்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவிற்கு கனிமொழி தலைமை தாங்குகிறார்.
குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம் வருமாறு: டிகேஎஸ் இளங்கோவன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ரஜா, எம்.எம். அப்துல்லா, கான்ஸ்டைன் ரவீந்திரன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், ஜி சந்தானம், சுரேஷ் சம்பந்தம்” ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.