ஆத்தூர் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வாலிபர் கைது

ஆத்தூர் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-28 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா மற்றும் போலீசார் சம்பவத்தன்று ஆத்தூரில் இருந்து சேர்ந்த பூ மங்களம் செல்லும் சாலையில் தனியார் ஆலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரை நிறுத்தி விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். தொடர் விசாரணையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டரை ஆபாசமாக பேசியதுடன் மிரட்டல் விடுத்துள்ளார். ஆனாலும், போலீசார் அவரை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் இருந்து 5 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர், தலைவன்வடலியை சேர்ந்த சிவபெருமாள் மகன் சிவராம்குமார் (வயது 24) என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்