தமிழர்களிடம் இருந்த பல தொழில்களை அபகரித்த வடமாநிலத்தவர்- வேல்முருகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

தமிழ்நாடு, இந்திக்காரர் மாநிலமாக உள்ளது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வேல்முருகன் கூறினார்.

Update: 2024-02-13 12:22 GMT

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் பேசினார்.

அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதன் மூலம் அனைத்து சாதியினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சமூகநீதி வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் சி.பி.ஐ., தபால் துறை, வங்கி, ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது. அவர்கள் நடத்தும் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன.

தமிழர்களிடம் இருந்த தங்கம், வெள்ளி, இரும்பு, எலக்ட்ரானிக்ஸ், சிறு,குறு தொழில்கள் என பல தொழில்களும் வடநாட்டவர்களால் அபகரிக்கப்பட்டுவிட்டன. தமிழ்நாடு, இந்திக்காரர் மாநிலமாக உள்ளது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்