எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
நம்பியார் நகர் நகராட்சி பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
நாகப்பட்டினம்:
நாகை நம்பியார் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் கற்றல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர்கள் இளங்கோவன், அன்பரசி ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி தலைமை ஆசிரியை உலகாம்பிகை வரவேற்றார். எண்ணும் எழுத்தும் கற்றல் திட்டத்தின் மூலம் மாணவ- மாணவிகளுக்கு எவ்வாறு சுலபமாக கல்வியை கற்றுத்தர முடியும் என்பது குறித்து நிகழ்ச்சியில் பேசப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.