பெண்ணை தாக்கிய முதியவர் கைது
பெண்ணை தாக்கிய முதியவர் கைது செய்யப்பட்டார்.;
வடகாடு அருகே மஞ்சுக்காடு கரு கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் வடுவம்பாள் (வயது 45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெரியான் (67) என்பவருக்கும் இடையே பாதை பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் வடுவம்பாளை, பெரியான் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து வடுவம்பாள் வடகாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் பெரியானை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுதொடர்பாக சோமசுந்தரம், ராஜ்குமார், இளையராஜா ஆகியோர் மீது வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.