சேதமடைந்து ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்குடை

இளையான்குடி அருகே உள்ள என்.அண்டக்குடி கிராமத்தில் அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.;

Update:2023-02-04 00:15 IST

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள என்.அண்டக்குடி கிராமத்தில் அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இளையான்குடியில் இருந்து நைனார்கோயில் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பயணிகள் நிழற்குடையில் மேற்கூரை சேதமடைந்துள்ளதால் பயணிகள் அச்சத்துடன் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. தரைத்தளம் மற்றும் சுற்றுச்சுவர் அனைத்தும் டைல்ஸ் பதித்து நல்ல நிலையில் காணப்படுகின்றது. மேற்கூரை மட்டும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் அல்லது புதிய நிழற்குடை அமைத்து தரும்படி வடக்கு அண்டக்குடி கிராம பொதுமக்கள் மற்றும் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்