பொது இடங்களில் குப்பைகள், கட்டிட கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் - ரூ.12.13 லட்சம் வசூலிப்பு

பொது இடங்களில் குப்பைகள், கட்டிட கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதுவரை ரூ.12 லட்சத்து 13 ஆயிரத்து 820 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Update: 2022-07-26 04:01 GMT

சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் தமிழ்நாட்டின் கலாசாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி கடந்த 7-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சென்னையில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டியவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 84 ஆயிரத்து 820-ம், கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 48 ஆயிரத்து 600-ம் மற்றும் அரசு மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியவர்களிடம் இருந்து ரூ.80 ஆயிரத்து 400-ம் என மொத்தம் ரூ.12 லட்சத்து 13 ஆயிரத்து 820 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்