பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி

பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2022-12-28 18:45 GMT

பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்காக கடந்த 2004-ம் ஆண்டு தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்திற்கு சென்ட் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 335 இழப்பீடாக அரசு வழங்கியது. இந்நிலையில் இழப்பீட்டு தொைக கூடுதலாக வழங்க வேண்டும் என்று லட்சுமிபுரத்தை சேர்ந்த தயாளன், கிருஷ்ணமூர்த்தி, வீரப்பன், கண்ணம்மாள், சித்ரா, வரலட்சுமி ஆகிய 6 பேர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இதற்கிடையே ஒரு சென்ட் நிலத்திற்கு இழப்பீடு தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி மாரியப்பன் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று காலை கோர்ட்டு அமினாக்கள் ரமேஷ், ஜென்சி மாலதி, மணி, பாதிக்கப்பட்டவர்களின் வக்கீல்கள் பாலமுருகன், கார்த்திகேயன் ஆகியோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் அலுவலகத்தை ஜப்தி செய்ததுடன் அலுவலகம் முன்பு நோட்டீஸ் ஒட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்