வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பா.ம.க.வினர் மனு

கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர்.

Update: 2022-06-30 20:19 GMT

கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் சமத்துவபுரம் அமைந்துள்ளது. இ்ந்த சமத்துவபுரம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் 100 வீடுகளில் தற்போது வரை பயனாளிகள் குடியிருந்து வருகின்றனர். இந்த வீடுகள் அனைத்தும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனை சரி செய்ய தமிழக அரசின் நிதி மூலம் 42 வீடுகளுக்கு தலா 2 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாயும், 58 வீடுகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிதி அனைத்தும் தவறாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று சேலம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பா.ம.க.வினர் கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வத்திடம் மனு அளித்தனர். மேலும் அனைத்து வீடுகளுக்கும் ஒரே மாதிரி நிதியை ஒதுக்கி வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது மாவட்ட தலைவர் பச்சமுத்து மற்றும் மயில்சாமி உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்