சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டம் - ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.163.31 கோடி மதிப்பில் ஒப்பந்தம்

தண்டவாளங்களை அமைக்கும் பணிக்கு ரூ.163.31 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ஜப்பான் நிறுவனத்திற்கு மெட்ரோ நிர்வாகம் வழங்கியுள்ளது.

Update: 2023-01-11 15:48 GMT

Image Courtesy : @cmrlofficial twitter

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 3 மற்றும் 5-ம் வழித்தடத்தில் தண்டவாளங்களை அமைக்கும் பணிக்கு ரூ.163.31 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ஜப்பானை சேர்ந்த மிட்சுயி அன்ட் கோ நிறுவனத்திற்கு மெட்ரோ நிர்வாகம் வழங்கியுள்ளது.


மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், மாதவரம் முதல் சி.எம்.பி.டி. வரையிலும் தண்டவாளங்கள் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் 3-ம் வழித்தடமான மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை மொத்தம் உள்ள 45.8 கி.மீ. மற்றும் 5-ம் வழித்தடமான மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவிற்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட உள்ளது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்