வைத்திலிங்கம் ஆதரவாளர் 19-ந்தேதி நேரில் ஆஜராக போலீஸ் சம்மன்

வைத்திலிங்கம் ஆதரவாளர் 19-ந்தேதி நேரில் ஆஜராக போலீஸ் சம்மன்

Update: 2022-07-16 19:47 GMT

சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக வைத்திலிங்கம் ஆதரவாளரான தஞ்சை அ.தி.மு.க. நிர்வாகி 19-ந்தேதி(செவ்வாய்க்கிழமை)ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு மோதல்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக கடந்த 11-ந் ்தேதி 2-வது முறையாக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர்.

தஞ்சை நிர்வாகிக்கு சம்மன்

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வைத்திலிங்கம் ஆதரவாளரான தஞ்சை கீழவாசல் பகுதி அ.தி.மு.க. செயலாளரான ரமேசுக்கு சென்னை ராயப்பேட்டை போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.

அந்த சம்மனில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை தொம்பன்குடியையை சேர்ந்த ரமேஷ், கடந்த 11-7-2022 அன்று சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு நடந்த கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள காட்சி அடிப்படையில், வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்ய வேண்டி உள்ளது. எனவே 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு விசாரணைக்காக ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முன்பு ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்