ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த வடசேரி துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளூர்பட்டிக்காடு, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை, கருப்பூர், புலவஞ்சி, கீழக்குறிச்சி, தொண்டராம்பட்டு, நெம்மேலி, அண்டமி, ஓலையக்குண்ணம், வளையக்காடு, மண்டபம், மகாதேவபுரம், கண்ணுகுடி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஒரத்தநாடு நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.