புரட்சி பாரதம் கட்சி நிறுவனர் பூவை மூர்த்தி நினைவு தினம்
நெமிலியில் புரட்சி பாரதம் கட்சி நிறுவனர் பூவை மூர்த்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;
நெமிலி
நெமிலியில் புரட்சி பாரதம் கட்சி நிறுவனர் பூவை மூர்த்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நெமிலி பஸ் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. நெமிலி நகர தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பூபாலன், ஒன்றிய பொருளாளர் உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பூவை மூர்த்தியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் என்.வி.நாதன், மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சின்னதுரை, நகர துணைத்தலைவர் சாமிநாதன், நகர இளைஞர் அணி தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.