இளங்கலை-இளம் அறிவியல் பாடப்பிரிவிற்கான முதற்கட்ட கலந்தாய்வு

இளங்கலை-இளம் அறிவியல் பாடப்பிரிவிற்கான முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது.

Update: 2022-08-07 18:28 GMT

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 2022-23-ம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மொத்த உள்ள 300 இடங்களுக்கு 926 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 150 மாணவர்கள் சிறப்பு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் ஹேமாமாலினி தலைமை தாங்கினார். முதல் கட்ட கலந்தாய்வில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், மாநில அளவிலான விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சேர்க்கை நடந்தது. மேலும் 2-ம் கட்ட கலந்தாய்வு 8-ந்தேதி (இன்று) மற்றும் 11-ந்தேதி (வியாழன்) நடைபெறும் என கல்லூரி முதல் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்