1½ வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

1½ வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

Update: 2023-01-31 12:43 GMT

1½ வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 22). இவர் திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கியிருந்து அங்கு வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இளங்கோவன், அந்த நிறுவன வளாகத்தில் தங்கியுள்ள ஒரு தொழிலாளியின் 1½ வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் அவினாசி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

20 ஆண்டு சிறை தண்டனை

அதில், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு இளங்கோவனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், போக்சோ பிரிவுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், அபராத தொகையை குழந்தையின் மருத்துவ செலவு மற்றும் மறுவாழ்வுக்கு வழங்க வேண்டும்.

இந்த தண்டனையை ஏக காலத்தில் இளங்கோவன் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்