அரசு பணியாளர் தேர்வாணைய இணையவழி போட்டித்தேர்வு
மயிலாடுதுறையில் அரசு பணியாளர் தேர்வாணைய இணையவழி போட்டித்தேர்வு ; கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு;
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி.பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இளநிலை அறிவியல் அதிகாரி மற்றும் தமிழ்நாடு தடய அறிவியல் துணைப்பணிக்கான இணையவழி போட்டி தேர்வு நடந்தது. இந்த தேர்வானது காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பின்னர் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடந்தது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த 74 பேரில், 52 பேர் இணையவழி போட்டித்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இத்தேர்வு மையத்தில், இணையவழி போட்டித்தேர்வுக்காக தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளனவா என்பதை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி கலெக்டர் யுரேகா, தாசில்தார் மகேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.