போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்
ஆம்பூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டுள்ளார்.;
ஆம்பூர் நகரில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக போலீசாரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
எனவே நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீஸ் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.