புதுக்கோட்டை அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

புதுக்கோட்டை அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. இதில், 1,240 இடங்களுக்கு 6,147 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Update: 2022-08-05 19:07 GMT

கலந்தாய்வு

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அதன்படி புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீடு பிரிவின் பேரில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

இக்கல்லூரியில் மொத்தம் 13 பாடப்பிரிவுகளில் 1,240 இடங்கள் உள்ள நிலையில் 6 ஆயிரத்து 147 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். மதிப்பெண்கள் தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். கலந்தாய்வு தொடர்ந்து பாட வாரியாக நடைபெற உள்ளது.

சான்றிதழ்கள் சரிபார்ப்பு

இதேபோல் மன்னர் கல்லூரியிலும் நேற்று கலந்தாய்வு தொடங்கியது. இதில் ஆயிரம் இடங்களுக்கு 9 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருப்பதாக கல்லூரி வட்டாரத்தில் தெரிவித்தனர். இதிலும் கலந்தாய்வு அடிப்படையில் மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது. கலந்தாய்வில் மாணவ-மாணவிகளின் சான்றிதழ்கள், மதிப்பெண்களை பேராசிரியர்கள் சரிபார்த்து சேர்க்கை அனுமதி வழங்கினர். கலந்தாய்வு அனைத்தும் முடிந்த பிறகு முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு வெளியாகும்.

Tags:    

மேலும் செய்திகள்