காஞ்சீபுரம் அடுத்த வாரணவாசி ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு

காஞ்சீபுரம் அடுத்த வாரணவாசி ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-08-22 09:59 GMT

காஞ்சீபுரம் அடுத்த வாரணவாசி ஊராட்சியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், அளவூர் திருவள்ளுவர் தெருவில் தனியார் நிறுவனம் சார்பாக சமூக கூட்டாண்மை பொறுப்புணர்வு நிதியின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் நிலையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.பிரேமா மோகனசுந்தரம் தலைமை தாக்கி குடிநீர் நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் திருவள்ளூர் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி க.மோகன சுந்தரம், தொழிலதிபர்கள் எம்.வினோத் குமார், எம்.பிருத்திவிராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏ.ஏகவள்ளி அன்னப்பன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்