ரெயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ரெயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2022-08-08 00:59 IST

திருச்சி கோட்ட மேலாளர் அலுவலக நுழைவுவாயில் முன்பாக, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், உணவு இடைவேளை நேரத்தில் நடந்தது. சங்க பொது செயலாளர் அப்சல் அறிவுரையின்படி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக, உதவி பொதுச்செயலாளர் பிரசன்னகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தென்னக ரெயில்வே முழுவதும் ஓ.பி.சி. தொழிலாளர்கள் அனைவருக்கும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு சரியான முறைப்படி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தும், ஓ.பி.சி. பிரிவினருக்கான பின்னடைவு, பதவி உயர்வு வாய்ப்பினை தாமதப்படுத்தி மூப்பு நிலை இழப்பு, பொருளாதார இழப்பை தடுக்கக்கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை கோட்ட தொழிலாளர் நல நிதியுதவி கமிட்டி உறுப்பினர் சகாய விஜய் ஆனந்த் ஒருங்கிணைத்தார். இதில் திரளான ரெயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்