பர்கூர் மலைப்பகுதியில் மழை: எண்ணமங்கலம் ஏரி நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு

பர்கூர் மலைப்பகுதியில் பெய்த மழையால் எண்ணமங்கலம் ஏரி நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது.

Update: 2022-06-17 23:22 GMT

அந்தியூர்

பர்கூர் மலைப்பகுதியில் பெய்த மழையால் எண்ணமங்கலம் ஏரி நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

அந்தியூர் அருகே எண்ணமங்கலம் ஏரி உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 11.25 அடியாகும். இந்த ஏரிக்கு பர்கூர் கிழக்கு மலைப்பகுதியில் வழுக்குப்பாறையில் பெய்யும் மழைநீர் வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் எண்ணமங்கலம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

ஏரி நீர்மட்டம் உயர்வு

இதன் மூலம் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஏரியின் நீ்ர்மட்டம் 3 அடியில் இருந்து 8 அடியாக உயர்ந்து உள்ளது. அதாவது ஒரே நாளில் ஏரியின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து பர்கூர் மலைப்பகுதியில் மழை பெய்து வந்தால் விரைவில் எண்ணமங்கலம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்