ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் - பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு

ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு

Update: 2024-05-23 16:12 GMT

சென்னை,

ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், நேரத்தை முறையாக கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி சென்னை மற்றும் புறநகரில் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல், மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்