தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்;
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீ விபத்தில் வீடுகளை இழந்த ரமாமூர்த்தி, மணிகண்டன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகிய 3 பேருக்கு உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 ஆயிரம் நிவாரண தொகை மற்றும் பொருட்களை வழங்கினார். அப்போது தாசில்தார் ராஜி, திருநாவலூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி இளங்கோவன், நிர்வாகி குணசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.