ஆர்.பி. உதயகுமாரின் பேனர்கள் கிழிப்பு... அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு

இராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;

Update:2022-06-26 17:52 IST

இராமநாதபுரம்,

இராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இராமநாதபுரத்தில் அதிமுக நகர பொருளாளராக இருக்கும் மணிகண்டன் என்பவரின் குழந்தைகளின் காதணி விழா இன்று நடைபெற்றது.

இந்த காதணி விழாவிற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வர உள்ள நிலையில், அவரை வரவேற்கும் விதமாக அதிமுக நிர்வாகிகள் பலர் தனியார் திருமண மண்டபத்தை சுற்றி பேனர்கள் வைத்திருந்தனர். இந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்