மரக்கன்றுகள் நடும் விழா

கடையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.;

Update:2023-04-13 00:30 IST

கடையம்:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கடையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டார். வார்டு உறுப்பினர்கள் சமுத்திரகனி, வசந்த், காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ஜெய சக்திவேல் வரவேற்றார். இதில் தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மரக்கன்றுகளை நட்டனர். பணித்தள பொறுப்பாளர்கள் ரஞ்சித் ராணி, அம்பிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்