சுதந்திர தின அமுத பெருவிழா சுங்கத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது

சென்னை சுங்க இல்லத்தில் சுதந்திர தின அமுத பெருவிழா சுங்கத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

Update: 2022-06-08 13:18 GMT

சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை சுங்க இலாகா சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையிடம் இருந்து மகிழம், பூவரசு, குதிரைப்பிடுக்கன், புங்கன் மற்றும் வில்வம் ஆகிய 5 வகைகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் வாங்கப்பட்டு, சென்னை சுங்க இலாகா அதிகாரிகளுக்கு வினியோகிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மரக்கன்றுகள் விமான நிலைய ஆனைய வளாகம், கடலோர பாதுகாப்பு படை வளாகம், பள்ளிகள், குடியிருப்பு வளாகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் நடப்பட்டது.

சென்னை சுங்க இல்லத்தில், சுங்கத்துறை தலைமை கமிஷனர் எம்.வி.எஸ்.சவுதாரி மரக்கன்றுகளை நட்டார். இதனைத்தொடர்ந்து முதன்மை கமிஷனர் (விமான சரக்கு சுங்கப்பிரிவு) மீனம்பாக்கத்தில் உள்ள புதிய சுங்க இல்லத்திலும், கமிஷனர்கள், கூடுதல் மற்றும் இணை கமிஷனர்கள் மற்றும் அதிகாரிகளும் மரக்கன்றுகளை நட்டனர். இதுகுறித்து சுங்கத்துறை முதன்மை கமிஷனர் கே.ஆர்.உதய் பாஸ்கர் பேசும்போது, சுற்றுச்சூழலை பாதுகாக்கவேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார். மேலும் மரக்கன்றுகளை நட்ட பின்னர், அதனை பராமரிக்கவேண்டியதையும் அவர் விளக்கி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்