முழு உடல் பரிசோதனை செய்வதாக கிராம மக்களிடம் நூதன மோசடி

முழு உடல் பரிசோதனை செய்வதாக கிராம மக்களிடம் நூதன மோசடி நடைபெற்றுள்ளது.

Update: 2022-09-24 20:55 GMT

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த எப்.கீழையூர் பகுதியில் 3 பேர் மருத்துவ முகாம் நடத்துவதாக கூறி அங்குள்ள சேவை மையக் கட்டிடத்திற்கு வந்தனர். முன் பதிவிற்கு 30 ரூபாய் கட்டணமும், முழு உடல் பரிசோதனை செய்திட 500 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்தனர். அதன்படி ஒவ்வொரு வீடாகச் சென்று முன்பே பதிவு கட்டணமாக 30 ரூபாயை பெற்றுக்கொண்டனர். ஆனால் பரிசோதனைக்கான எந்தவித எந்திரங்களும் இல்லாததால் சந்தேகமடைந்த பொதுமக்கள், இதுபற்றி சுகாதாரத்துறை, போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது எந்தவித அனுமதியின்றியின்றி மருத்துவ முகாம் போன்று ஏற்பாடு செய்திருப்பதும், மக்களிடம் பணம் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ முகாம் போன்று நடத்தி பணம் வசூலித்த தேனி மற்றும் போடி பகுதியை சேர்ந்த 3 பேரிடம் மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்