பிளஸ்-2 பொதுத்தேர்வில் பார்வையற்றோர் பள்ளியில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

பிளஸ்-2 பொதுத்தேர்வில் பார்வையற்றோர் பள்ளியில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2023-05-09 11:16 GMT

பூந்தமல்லியில் பார்வையற்றோருக்கான அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பார்வை குறைபாடுள்ள மாணவர்கள் 1 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளி வளாகத்தின் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இதில் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வை 17 மாணவர்கள் தேர்வு எழுதினர். நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்வு எழுதிய 17 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். மேலும் 17 பேரும் தேர்ச்சி பெற்றதால் தற்போது அரசு பார்வையற்றோர் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்