ராமேசுவரம்-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து - அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

இந்தியா - இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

Update: 2023-04-02 00:47 GMT

சென்னை,

தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட துறை ரீதியான அறிவிப்புகள் வருமாறு:-

* மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கிற்கு செல்லும் சாலை அகலப்படுத்தப்படும்.

* ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல புறவழிச்சாலைகள் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

* கரூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் இடையே போக்குவரத்துக்கு ஏற்ப புதிய இணைப்பு உருவாக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

* இந்தியா-இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தை, ராமேசுவரம்-தலைமன்னார் (50 கி.மீ); ராமேசுவரம்-காங்கேசந்துறை (100 கி.மீ) ஆகிய வழித்தடங்களில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக ராமேசுவரம் சிறுதுறைமுக பகுதியில் கப்பலணையும் மேடை, பயணிகள் தங்குமிடம், சுங்க சோதனை மையங்கள் ஆகியவற்றை உருவாக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்